உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கி ஊழியரிடம் வழிப்பறி; சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

வங்கி ஊழியரிடம் வழிப்பறி; சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது

திருப்பூர்; கோவில்வழியை சேர்ந்தவர் பாலு, 26; தனியார் வங்கி ஊழியர். 'கிரைண்டர்' செயலி பயன்படுத்தி வந்தார். ஓரினச்சேர்க்கைக்காக சந்தோஷ் என்ற நபர் பேசி வந்தார். இருவரும் சந்திக்க முடிவு செய்தனர்.பாலுவை, கோவில்வழி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு வருமாறு அழைத்தார். இதன்படி அங்கு சென்று சந்தோஷூடன் பாலு பேசிக்கொண்டிருந்தார். திடீரென காட்டு பகுதியில் மறைந்து இருந்த கும்பல், பாலுவை சுற்றிவளைத்து, பணம், வெள்ளி செயின், மொபைல் மற்றும் டூவீலரை பறித்து சென்றனர்.நல்லுார் போலீசார் விசாரித்தனர். காங்கயம் ரோட்டை சேர்ந்த சந்தோஷ், 26, அவரது நண்பர்கள் ஷர்புதீன், 26, வசந்த், 24 மற்றும் ஐந்து சிறுவர்கள் என, ஏழு பேருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. எட்டு பேரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !