உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடைப்பந்து; ஜெய்வாபாய் அபாரம்

கூடைப்பந்து; ஜெய்வாபாய் அபாரம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாணவியர் கூடைப்பந்து போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்டம் முழுதும் குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற குறுமைய அளவில் முதலிடம் பெற்ற ஏழு அணிகள் பங்கேற்றன. பதினான்கு வயது பிரிவில், தாராபுரம் செயின்ட் அலோசியஸ் பள்ளி அணி 18 - 17 என்ற கோல் கணக்கில், ஜெய்வாபாய் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில், உடுமலை, ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளி அணி, 26 - 6 என்ற கோல்கணக்கில், தாராபுரம், செயின்ட் அலோசியஸ் பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி 17 - 6 என்ற கோல்கணக்கில், பல்லடம் இன்பேன்ட் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் மாநில கூடைப்பந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளன. பால்பேட்மின்டன் திருப்பூர், காலேஜ் ரோடு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில், மாணவியர் பால்பேட்மின்டன் போட்டி நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் போட்டியை துவக்கி வைத்தார். தாராபுரம், காங்கயம், உடுமலை, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு, அவிநாசி, பல்லடம் ஆகிய ஏழு குறுமையங்களில், குறுமைய அளவில் முதலிடம் பெற்ற, 210 பேர் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுக்கான போட்டிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை