உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பத்ராவதி - பாவநாராயணர் திருக்கல்யாணம்

 பத்ராவதி - பாவநாராயணர் திருக்கல்யாணம்

திருப்பூர்: திருப்பூர் பத்மசாலியார் சமூகம் சார்பில் ஸ்ரீ பத்ராவதி ஸ்ரீ பாவநாராயண சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்று திருப்பூரில் நடைபெற்றது. திருப்பூர் பத்மசாலிய சமூகத்தினர் சார்பில் 3வது ஆண்டு, ஸ்ரீ பத்ராவதி தாயார் - ஸ்ரீ பாவநாராயண சுவாமிகள் திருக்கல்யாண பெருவிழா வைபவம் நேற்று காலை காலேஜ் ரோடு, திருப்பூர் சேவா சமிதி அரங்கில் நடந்தது. முன்னதாக கொங்கணகிரி கந்தப் பெருமான் கோவிலிலிருந்து திருமண சீர் வரிசை, முளைப்பாலிகை ஆகியன ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன. மங்கள வாத்தியம் இசைத்தபடி சீர் வரிசையை ஏந்தியபடி பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர். திருப்பூர் சேவா சமிதி அரங்கில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருமண வைபவத்தைக் கண்டு வணங்கினர். திருமண கோலத்தில், ஸ்ரீபத்ராவதியும் ஸ்ரீ பாவநாராயண சுவாமியும்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை