பாரதிய மஸ்துார் இளைஞர் மாநாடு
திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்துார் சங்க இளைஞர் மாநாடு சோளிபாளையத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். பனியன் சங்க பொருளாளர் கருப்பசாமி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் பேசினார்.மாநில துணை தலைவர் பிரபு, மாநில செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.