மேலும் செய்திகள்
புது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
26-Aug-2024
திருப்பூர் : திருப்பூர் ரேஷன் கடைகளில், வடமாநில தொழிலாளர்களின், 'பயோமெட்ரிக்' பதிவு சரிபார்ப்பு பணி நேற்று முதல் துவங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தி, சரிபார்ப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.போலி ரேஷன் கார்டுகளை களையும் வகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் குடும்ப உறுப்பினர் அனைவரின் பயோமெட்ரிக் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. வேலை நிமித்தமாக வடமாநில தொழிலாளர் ஏராளமானோர் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.வடமாநில தொழிலாளர்கள், தமிழக ரேஷன்கடைகளிலேயே பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து, உறுதி செய்யும் வகையில், 'பாய்ன்ட் ஆப் சேல்' கருவி மென்பொருளில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.மாவட்டத்திலுள்ள 1,135 ரேஷன் கடைகளிலும், நேற்று முதல், வடமாநில தொழிலாளர் பயோமெட்ரிக் சரிபார்ப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பாயின்ட் ஆப் சேல் கருவியில் கார்டுதாரரின் ஆதார் ஸ்கேன் செய்து, பொது வினியோக திட்டத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட நபரின் பெயர் தேர்வு செய்யப்படுகிறது.கைரேகை அல்லது கண் கருவிழி ஸ்கேன் செய்யப்பட்ட, ரேஷனில் இணைக்கப்பட்டுள்ள விவரங்களோடு, சம்பந்தப்பட்ட நபரின் பயோமெட்ரிக் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒடிசா, பீகார் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், அருகாமை ரேஷன்கடைகளுக்கு சென்று, தங்கள் விவரங்களை தெரிவித்து, பயோமெட்ரிக் சரிபார்ப்பதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.
26-Aug-2024