மேலும் செய்திகள்
மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி
18-Jun-2025
திருப்பூர்: ஹிந்து முன்னணி சார்பில், முருக பக்தர்கள் மாநாடு இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த சில நாட்களாக மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறுபடை வீடு கண்காட்சியை பலரும் பார்த்து செல்கின்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் திரளாக செல்கின்றனர்.அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் பா.ஜ.,வினர் மாநாட்டுக்கு வேல் ஒன்றை கொண்டு செல்ல தயார் செய்தனர். இந்த வேலுக்கான வழிபாடு திருப்பூர் கொங்கணகிரி முருகன் கோவிலில் நேற்று மாலை நடந்தது. கோவிலில் வேலை வைத்து வழிபாடு செய்தனர். வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட பொது செயலாளர் அருண் மற்றும் கவுன்சிலர் குணசேகரன் உட்பட பலரும் பங்கேற்றனர். இந்த வேலை பா.ஜ.,வினர் மதுரைக்கு எடுத்து செல்கின்றனர்.
18-Jun-2025