உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கறவை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை; கால்நடை சிகிச்சை வளாகத்தில் சாதனை

கறவை மாட்டுக்கு ரத்த மாற்று சிகிச்சை; கால்நடை சிகிச்சை வளாகத்தில் சாதனை

உடுமலை : உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கறவை மாட்டுக்கு, ரத்த மாற்று உள்ளிட்ட உயர்தர சிகிச்சை, கால்நடை மருத்துவ கல்லுாரியின் சிகிச்சை வளாகத்தில் வழங்கப்பட்டு, மாடு பாதிப்பிலிருந்து மீண்டது.மடத்துக்குளம் தாலுகா கொழுமம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்; விவசாயி. இவரது கறவை மாட்டுக்கு, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, உடல் நிலை மோசமானது.அப்பகுதியிலுள்ள, கால்நடை மருத்துவர்கள், மேல்சிகிச்சைக்காக, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரியின் பெதப்பம்பட்டி கால்நடை சிகிச்சை வளாகத்துக்கு பரிந்துரைத்தனர்.அங்கு, கால்நடை மருத்துவ சிகிச்சையியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் தலைமையிலான குழுவினர் கறவை மாட்டை பரிசோதித்தனர். அதில், உண்ணி காய்ச்சலால், அம்மாட்டுக்கு, ரத்தம் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.மாட்டுக்கு, ரத்த மாற்று சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டு, மற்றொரு மாடு அழைத்து வரப்பட்டு, ரத்த மாதிரியை பரிசோதித்தனர்.இதையடுத்து, ரத்த மாற்று சிகிச்சையை டாக்டர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவர்கள் அடங்கிய குழுவினர் துவக்கினர்; 3 லிட்டர் ரத்தம், பாதிக்கப்பட்ட மாட்டுக்கு ஏற்றப்பட்டு, சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கு பிறகு கறவை மாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.'உண்ணி காய்ச்சலால் அதிகம் பாதிக்கும் மாடுகளுக்கு ரத்தசோகை மற்றும் ரத்தம் குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, கால்நடை வளர்ப்போர் கவனத்துடன் செயல்பட வேண்டும்,' என டாக்டர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'கால்நடை மருத்துவ கல்லுாரியின் பெதப்பம்பட்டி சிகிச்சை வளாகத்தில், கால்நடைகளுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கிறது. பல்வேறு மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகளுக்கான கருவிகள் இங்குள்ளது. சிக்கல் மிகுந்த கால்நடைகளின் பிரச்னைகளுக்கு, சிகிச்சை அளித்து மீட்க உதவிய பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ கல்லுாரி முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை