உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி மாணவருக்கு புத்தகங்கள், சீருடை

அரசு பள்ளி மாணவருக்கு புத்தகங்கள், சீருடை

அவிநாசி : முதல்வர் ஸ்டாலின் நேற்று திருவல்லிக்கேணியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2025--26ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.அதில் ஒரு பகுதியாக, தெக்கலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு பாடபுத்தகம், சீருடை, நோட்டுகள் உட்பட கல்வி உபகரண நலத்திட்ட பொருட்களை வழங்கினார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, தெக்கலுார் பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) அசோக்குமார், ஆசிரியர்கள் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை