வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாழ்க அந்த ஊர் மக்கள்
திருப்பூர், கூலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தின் தென் மேற்கு பகுதியில் உள்ளது நஞ்சராயன் நகர் பகுதி. நஞ்சராயன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள ரோடு வழியாக இந்தப் பகுதிக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த குடியிருப்பு பகுதி நுாற்றுக்கணக்கான மனையிடங்களுடன் கடந்த 30 ஆண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டது. இது நான்கு பிரதான வீதிகளும் 12 குறுக்கு வீதிகளிலும் வீடுகள் அமைந்துள்ளன.இதனருகே அமைந்துள்ள நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் நுாற்றுக்கணக்கான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. வலசை வரும் பறவைகள் பட்டாசு, வெடிகள் ஏற்படுத்தும் அதிக ஒலியால் அச்சமுறும், அதன் இயல்பு பாதிக்கப்படும் என்பதால், இங்கு வசிக்கும் மக்கள் தீபாவளியின் போது, பட்டாசுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். அப்பகுதியினர் கூறியதாவது: பறவைகள் நலன் கருதி, பட்டாசு வெடிப்பதில்லை. எங்கள் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களும் இதை ஏற்றுக் கொண்டனர். பண்டிகை கொண்டாட்டம் எங்களுக்கு பட்டாசு இல்லாமல் தான் எப்போதும் உள்ளது. பறவைகளுக்காக எங்கள் சிறுவர்கள் இதை தியாகம் செய்து வருகின்றனர்.
வாழ்க அந்த ஊர் மக்கள்