உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் தொழிலாளர்களுக்கான  மார்பக புற்றுநோய் பரிசோதனை

பெண் தொழிலாளர்களுக்கான  மார்பக புற்றுநோய் பரிசோதனை

திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில்முறை பங்களிப்போர் அமைப்பு, பெண் தொழில் முனைவோர் துணைக்குழு மற்றும் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கம் சார்பில், பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை - வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வருகிறது.கடந்த வாரங்களில், எஸ்.சி.எம்., கார்மென்ட்ஸ், எஸ்.என்.க்யூ.எஸ்., நிறுவனங்களில், விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதனை தொடர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களின் நிறுவனங்களில், விழிப்புணர்வு முகாம் நடந்து வருகிறது.பி.என்.டி., இன்னோவேஷன் நிறுவனத்தில் நேற்று முகாம் நடந்தது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவக்குழுவினர், மார்பக புற்றுநோயை, ஆரம்ப நிலையில் கண்டறிய, 'டிஜிட்டல் 3டி' தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட பரிசோதனை வாகனத்தை இயக்கி வருகின்றனர். அதன்மூலம் நிறுவனங்களுக்கு சென்று, பெண்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்படுகிறது.நேற்றைய முகாமில், 70க்கும் அதிகமான பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை -வாய் புற்றுநோய் பரிசோதனை நடந்தது. திருமுருகன்பூண்டி ரோட்டரி தலைவர் கார்த்திகேயன், பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் தலைவர் சுமிதா ரவி, உறுப்பினர் சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி