உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பாலம் கட்டுமான பணி இழுபறி:  பாதித்து வரும் பொதுமக்கள்

 பாலம் கட்டுமான பணி இழுபறி:  பாதித்து வரும் பொதுமக்கள்

உடுமலை: உடுமலை வி.ஜி., ராவ் நகர் பாலம் கட்டுமான பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். உடுமலை திருப்பூர் ரோடு, வி.ஜி., ராவ் நகர், யு.கே.சி., நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு செல்லும் ரோட்டின் குறுக்கே ஓடை உள்ளது. இந்த ஓடையை கடக்க, ஏற்கனவே இருந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டுமான பணி துவங்கியது. பழைய பாலம் அகற்றப்பட்ட நிலையில், புதிய பாலம் கட்டுமான பணி மாதக்கணக்கில் இழுபறியாகி வருகிறது. இதனால், இக்குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, பாலம் கட்டுமான பணியை உடனடியாக துவக்கி, விரைந்து முடிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை