உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் வருவதில்லை பயணியர் தவிப்பு

பஸ் வருவதில்லை பயணியர் தவிப்பு

திருப்பூர்: உரிய நேரத்தில் பஸ் வராததால் பயணிகள் தவிக்கின்றனர். திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து போயம்பாளையம், நெருப்பெரிச்சல் நால்ரோடு, ஜெயாநகர், திருக்குமரன் நகர் அப்பார்ட்மென்ட், பாரதிநகர் வழியாக சமத்துவபுரத்துக்கு, டவுன் பஸ் (டி.என். 38 என் 4096) இயக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பயணிகள் இந்த பஸ்சை நம்பி தினசரி பள்ளி, கல்லுாரி, வேலைக்கு சென்று திரும்புகின்றனர். காலை 7:30 முதல் 8:00 மணிக்குள் வரும் பஸ். பத்து நாட்களாக, 8:30 மணி, 8:45க்கு தான் வருகிறது. இதனால், சரியான நேரத்துக்கு பள்ளி, கல்லுாரி பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சரியான நேரத்துக்கு பஸ்கள் சென்று வருவதை போக்குவரத்து கழக அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை