உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாட்டுக்கோழி பண்ணை விண்ணப்பிக்க அழைப்பு

நாட்டுக்கோழி பண்ணை விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு நிதியாண்டில், கிராமப்புறங்களில், சிறிய அளவிலான கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.நாட்டுக்கோழி பண்ணைகளை அமைக்க தேவையான கொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு, நான்கு மாதங்களுக்கு தேவையான தீவன செலவு உள்ளிட்ட மொத்த செலவினத்தில், 50 சதவீதம் அரசு மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவீத தொகையை, பண்ணை அமைப்போர் தனது சொந்த பங்களிப்பாக செலுத்த வேண்டும்; வங்கிகள் மூலம் கடனாகவும் பெறலாம்.நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விரும்புவோர், பண்ணை அமைவிடத்துக்கான சிட்டா, அடங்கல் நகல், 50 சதவீத பங்களிப்பு தொகை செலுத்துவதற்கான ஆதார ஆவணங்கள், ஆதார் கார்டு ஆகியவற்றை அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி