உங்கள் ஊரில் முகாம்
'உங்களை தேடி உங்கள் ஊரில்' கலெக்டர் சிறப்பு முகாம், நாளை மற்றும் நாளை மறுதினம் ஊத்துக்குளியில் நடக்கவுள்ளது.நாளை (22ம் தேதி) காலை முதல் மதியம் வரை அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணி குறித்து கலெக்டர் கள ஆய்வு மேற்கொள்கிறார். மதியம் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு கூட்டமும், மாலை பொதுமக்களிடம் குறைகேட்பு, மனு பெறும் நிகழ்வும் நடக்கிறது. இரவு ஊத்துக்குளியில் தங்கும் கலெக்டர், வரும், 24ம் தேதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதார செயல்பாடு, குடிநீர் வழங்கல், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.