உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நவீன தொழில்நுட்பத்தில் முருங்கை வளர்க்கலாமே!

நவீன தொழில்நுட்பத்தில் முருங்கை வளர்க்கலாமே!

பொங்கலுார் : முருங்கை விளைய நல்ல வெப்பம் தேவை. அதிக மழைப்பொழிவு இருக்கும் காலங்களில் முருங்கை விளைச்சல் இருக்காது.இந்த ஆண்டு பருவமழை துவங்கியதிலிருந்து முருங்கை பூக்கள் மொத்தமாக உதிர்ந்து விட்டது. இதனால், காய்கள் இன்றி வெற்று மரங்களாக காட்சி அளிக்கிறது. மொத்த விளைச்சலில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உற்பத்தி இல்லை.இதனால், முருங்கை விலை உச்சத்தை தொட்டுள்ளது. சந்தையில் ஒரு காய், 25 ரூபாய் வரை விலை போகிறது. சீசன் காலத்தில் ரூபாய்க்கு நான்கு காய் கிடைக்கிறது. தற்போதைய விலைக்கும் சீசனில் கிடைக்கும் விலைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.இது ஏறத்தாழ, 100 மடங்கு விலை உயர்வு ஆகும். இன்றைய நவீன உலகில் மழை, வெயில் படாமல் முருங்கையை வளர்க்க முடிந்தால்விவசாயிகளுக்கு மிகப்பெரிய வருமானத்தை அள்ளித் தரும். அதற்கு பசுமை குடில் போன்ற அமைப்புகளை நிறுவ வேண்டும்.இதற்கு ஏராளமான பொருட்செலவு செய்ய வேண்டி இருக்கும். இது சாதாரண விவசாயிகளால் முடியாது. இன்றைய நிலையில் சாதாரண மனிதர்களால் முருங்கைக்காய் வாங்க இயலாது.உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, அரசு இதில் பெரிய அளவில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கலாம்.அவ்வாறு செய்யும் பொழுது மழைக்காலத்திலும் முருங்கை அறுவடையை எளிதாக செய்ய முடியும். இதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை