உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வேட்பாளருக்கு வழிகாட்ட புத்தகம்

 வேட்பாளருக்கு வழிகாட்ட புத்தகம்

திருப்பூர்: எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில், திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 30ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பதிவு செய்யப்பட்ட கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மனு தாக்கல் தொடர்பான வழிகாட்டுதல்கள், விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள்; ஓட்டுப்பதிவு நாளில் வேட்பாளர் பயன்படுத்துவதற்கான அடையாள அட்டை மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான வழிகாட்டி புத்தகங்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளன. தரைதள கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை, தொகுதி வாரியாக பிரித்து அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வேட்பு மனு வாங்க வரும் வேட்பாளர்களுக்கு, இந்த வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை