பீன்ஸை விட உயர்ந்த கேரட் விலை; இல்லத்தரசிகளுக்கு வந்த கவலை
திருப்பூர் ; சில காய்கறி விலை உயர்ந்ததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தீபாவளிக்கு பண்டிகைக்கு பின் திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இருப்பினும், தக்காளி குறைந்து பிற காய்கறிகள் விலை குறையாமல் உள்ளது. வரத்து அதிகரிப்பால், முள்ளங்கி கிலோ, 26 - 34 ரூபாய்க்கு விற்றது. இந்த வாரம் பச்சை மிளகாய், முட்டைக்கோஸ் வரத்து அதிகம். இவற்றை மழையில் இருப்பு வைக்க முடியாததால், விரைவில் விற்றுத்தீர்த்து விட வேண்டும் என்பதால், இவற்றின் விலையை வியாபாரிகள் குறைத்துள்ளனர்.நேற்று பச்சை மிளகாய் கிலோ, 30 ரூபாய், முட்டைக்கோஸ் கிலோ, 26 ரூபாய்க்கு விற்றது. வரத்து குறைந்துள்ள நேரத்தில் கேரட் தேடி அதிகளவில் வாடிக்கையாளர் வருகின்றனர். இதனால், கேரட் (76 ரூபாய்) விலை பீன்ஸை (60 ரூபாய்) விட உயர்ந்துள்ளது. தக்காளி, 25, பவானி கத்தரி, 60, அவரை, 70, சிம்ரன் கத்தரி, 40, வெண்டை, 48, புடலை, 35, பாகற்காய், 46, பீர்க்கன், 46, கொத்தவரை, 40, ஊட்டி பீட்ரூட், 55, சாதா பீட்ரூட், 35, சுரைக்காய், 24, பூசணி, 20, அரசாணி, 20, சின்ன வெங்காயம், 66, பெரிய வெங்காயம், 60, முருங்கை கிலோ, 50, உருளை, 50, காலிபிளவர், 30, மேராக்காய், 28, தட்டை பொறியல், 35, சேனைக்கிழங்கு, 65, எலுமிச்சை, 120, இஞ்சி, 70 ரூபாய். ஒரு கட்டு விலை, கொத்தமல்லி, 55, புதினா, 20, கறிவேப்பிலை, 45, கீரை வகைகள் பத்து ரூபாய்.