உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓடையில் சிக்கன் கழிவு சுகாதாரம் கேள்விக்குறி

ஓடையில் சிக்கன் கழிவு சுகாதாரம் கேள்விக்குறி

திருப்பூர் : திருப்பூர் வீரபாண்டி பகுதியில் இருந்து, சங்கிலிப்பள்ளம் என்ற பெயருடன் வரும் ஓடை, நகரப்பகுதியை கடந்து, பூலாவாரி சுகுமார் நகர் அருகே நொய்யலில் கலக்கிறது.வீரபாண்டி அருகே, அகலமாக இருக்கும் சங்கிலிப்பள்ளம் ஓடையில், கழிவுநீர் மட்டும் சென்று கொண்டிருந்தது.அப்பகுதியில் கோழி இறைச்சி கழிவுகள் கொட்டுவது அதிகரித்துள்ளது. நகரப்பகுதியில் இயங்கும் கோழி இறைச்சி கடைகளில், கோழியின் இறகுடன் கூடிய தோல், குடல் பகுதிகள், கால்கள், தலை ஆகியவை கழிவாக வீசப்படுகின்றன.அரிசி சாக்கு பைகளில், இறைச்சி கழிவை சேமித்து வைத்து, 'டூ வீலரில்' சென்று, ஓடைகளில் கொட்டப்பட்டது. தற்போது, சிறிய மூட்டைகளாக கட்டி, அப்படியே மூட்டையாக வீசிவிடுகின்றனர்.அப்பகுதிகளில் காத்திருக்கும் தெருநாய்கள், இறைச்சிக்கழிவுகளை உண்கின்றன. இருப்பினும், நாளடைவில், இறகு மற்றும் இறைச்சிக்கழிவு துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. மழைகாலங்களில், இவை அப்படியே எடுத்துச்சென்று நொய்யலில் கலக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ