உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 22ல் முதல்வர் திருப்பூர் வருகை ; ரோடு ஷோ நடத்த திட்டம் 

22ல் முதல்வர் திருப்பூர் வருகை ; ரோடு ஷோ நடத்த திட்டம் 

திருப்பூர்; வரும் 22ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், வேலம்பாளையம் மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்கும் அவர், திருப்பூரில் 'ரோடு ஷோ' நடத்தி, மக்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தற்போது மாவட்டம் தோறும் சென்று வளர்ச்சித் திட்டப்பணி துவக்கம், ரோடு ஷோ நடத்தி மக்களைச் சந்தித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், 22ம் தேதி திருப்பூர் வருகை தரும் முதல்வர், தாராபுரம் ரோட்டில் கட்டப்பட்ட கோவில்வழி பஸ் ஸ்டாண்ட், வேலம்பாளையத்தில் மருத்துவமனை வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து, முக்கிய ரோடுகள் வழியாக முதல்வர் ''ரோடு ஷோ' நடத்தி பொதுமக்களைச் சந்தித்து பேசவும் திட்டமிடப்பட்டுள்ளது.இதனையொட்டி, திருப்பூரில் உள்ள பிரதான ரோடுகள் அனைத்திலும் மையத் தடுப்புகள், பாலங்கள் மீது வெள்ளை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.நேற்று காலை, கோவில் வழி புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மாநகராட்சி சார்பில் ஆய்வு நடந்தது. மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.திருப்பூரில் இவ்விரு திறப்பு விழாவை முடித்து விட்டு பல்லடம் ரோடு வழியாக 'ரோடு ஷோ' நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த நாள், (23ம் தேதி), உடுமலையில் நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் துவக்க விழாவிலும், ஸ்டாலின் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ