உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னையை தாக்கும் சுருள் வெள்ளைப் பூச்சி! மகசூல் குறைவதால் விவசாயிகள் அதிருப்தி

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளைப் பூச்சி! மகசூல் குறைவதால் விவசாயிகள் அதிருப்தி

திருப்பூர்:வெள்ளை சுருள் ஈ தாக்குதலால், தென்னை மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்து வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டத்தில், 1.40 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம் மற்றும் தாராபுரம் தாலுகாக்களில், பிரதான பயிராக தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட இடங்களிலும் கணிசமான விவசாயிகள் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.தற்போது, தேங்காய் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற்று வருகின்றனர். இருப்பினும், தென்னை மரங்களில், வெள்ளை சுருள் ஈ பாதிப்பு துவங்கியுள்ளது; இதனால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். தென்னை மரங்களில் அதிகளவில் வெள்ளை ஈ பரவியுள்ள நிலையில், மரங்களின் பச்சையத்தை உறிஞ்சி வளர்வதால், காய்ப்புத்திறன் படிப்படியாக குறைந்து விடுகிறது. தென்னை மரங்களில் உள்ள பசுமையான மட்டைகள், கறுத்துப்போக துவங்கியிருக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டாரத்தில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் அதிகளவில் தென்படுகிறது.தென்னை விவசாயிகள் கூறுகையில், 'தென்னை மரங்களில் வெள்ளைப்பூச்சி தாக்குதலுக்கு மருந்து தெளித்தாலும், அவை கட்டுக்குள் வருவதில்லை. தோட்டக்கலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் பெரும் இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ