கல்லுாரி நாள் விழா; சான்றிதழ், பதக்கம் வழங்கல்
உடுமலை : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் கல்லுாரி நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கல்லுாரி பேரவை ஒருங்கிணைப்பாளர் கலாவதி வரவேற்றார். கல்லுாரி செயலாளர் சுமதி தலைமை வகித்தார். ஆலோசகர் மற்றும் இயக்குனர் மஞ்சுளா முன்னிலை வகித்தார்.கல்லுாரி முதல்வர் கற்பகவல்லி, நடப்பு கல்வியாண்டின் கல்லுாரி செயல்பாடுகள், ஆசிரியர்களின் மேம்பாடு, மாணவியரின் செயல்பாடுகள், பல்வேறு மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தார். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அஜித்குமார்லால்மோகன், கல்லுாரி அளவில் அனைத்துத்துறைகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியர், கல்லுாரி பேரவை பல்வேறு மன்றங்களின் செயலாளர்கள், துணை செயலாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பொருளாதாரத்துறை இணை பேராசிரியர் ரஜினி, விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மாணவ பேரவைத்தலைவி ஜேன் கிரிஸ்ஸிகேத்தரின் நன்றி தெரிவித்தார்.