உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில வாள் வீச்சு போட்டி; சாதித்த மாணவிக்கு பாராட்டு

மாநில வாள் வீச்சு போட்டி; சாதித்த மாணவிக்கு பாராட்டு

அவிநாசி; ஓசூரில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான நடைபெற்ற வாள்வீச்சு விளையாட்டு போட்டி சமீபத்தில் நடந்தது.இதில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 'பென்சிங் டீம்' 19 வயதுக்குட்பட்ட பிரிவில், அவிநாசி புனித தோமையர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் தனலட்சுமி, சாதனா ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். நேற்று அவிநாசியில் நடந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, பேரூராட்சி அலுவலக ஊழியர் ரம்யாவின் மகளான சாதனா, வாள் வீச்சு போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றதை அறிந்து 5 ஆயிரம் ரொக்கம் வழங்கி பாராட்டினார். கலெக்டர் கிறிஸ்துராஜ், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சண்முகம், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ