கட்டட தொழிலாளி மர்ம சாவு
திருப்பூர்: நல்லுார் -புதுப்பாளையம் ரோட்டில், காயங்களுடன் மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக, நல்லுார் போலீசுக்கு தகவல் கிடைத்தது. முதல்கட்ட விசாரணையில், புதுப்பாளையத்தை சேர்ந்த சரவணன், 48; கட்டட தொழிலாளி என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு, டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தவர் வீட்டுக்கு வரவில்லை. உடலில் ரத்த காயங்களுடன் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் தவறி விழுந்து இறந்தாரா,தகராறு ஏற்பட்டுபலத்த தாக்குதலால் உயிரிழந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.