உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்

 தொடர் மழை மானாவாரிக்கு சிக்கல்

உடுமலை: குடிமங்கலம் பகுதியில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, கொண்டைக்கடலை, கொத்தமல்லி மானாவாரியாக சாகுபடி செய்யப்படும். நடப்பு சீசனில், வழக்கத்துக்கு மாறாக மானாவாரியாக மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடிமங்கலம் வட்டாரத்தின் மேற்குப்பகுதியில், கனமழை பெய்தது. இதனால், விளைநிலங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கி மானாவாரி சாகுபடி பாதிக்கும் நிலையில் உள்ளது. வேளாண்துறையினர் விளைநிலங்களில் ஆய்வு செய்து பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ