கொத்தமல்லி கட்டு ரூ.50 ஆக உயர்வு
பொங்கலுார்: கடும் வறட்சி மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக கொத்தமல்லி சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த மாதம் ரூ.10-க்கு விற்பனையான ஒரு கட்டு கொத்தமல்லி, கடந்த வாரம் ரூ.30 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் அதிகரித்து, ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளதால், கொத்தமல்லியின் விலையைக் கேட்டாலே மயக்கம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.