உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்கணும்! ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசியுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்கணும்! ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

அவிநாசி; அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம், ஒன்றிய தலைவர் (பொறுப்பு) பிரசாத்குமார் தலைமையிலும், ஆணையாளர்கள் ரமேஷ்குமார் (பொது), விஜயகுமார் (ஊராட்சி) ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.கூட்ட விவாதம்:கார்த்திகேயன் (தி.மு.க.,): அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சியில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். அனைவரும் அன்றாட தேவைகளுக்காக அவிநாசி நகர்ப்பகுதியை சார்ந்தே இருக்கின்றனர்.பழங்கரை கிராம ஊராட்சியை திருமுருகன் பூண்டி நகராட்சியுடன் இணைப்பதாக மாவட்ட நிர்வாகம் கடந்த செப்., 5ம் தேதி கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தினர்.அதில் பங்கேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், அவிநாசியை நகராட்சியாக தரம் உயர்த்தும்போது பழங்கரை ஊராட்சியை அதனுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அனைத்துக் கட்சியினர் சார்பிலும், தனி சிறப்பு கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழங்கரை கிராம ஊராட்சியை அவிநாசியுடன் இணைப்பதற்கு சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும்.சேது மாதவன் (தி.மு.க.,): பெரியாயிபாளையம் சுகாதார மையக் கட்டடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தேவம்பாளையம் அம்மன் நகரில் தார் சாலை அமைத்து தர வேண்டும்.அய்யாவு (அ.தி.மு.க.,): துலுக்கமுத்துார் ஊராட்சியில் கல்லுமடை குட்டை அருந்ததியர் காலனி பகுதியில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைத்து தர வேண்டும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.உள்ளாட்சி பிரதிநிதிகளின், பதவிக்காலம் அடுத்த மாதம், 5ம் தேதியுடன் முடிவடைவதால், அனைத்து கவுன்சிலர்களும், அதிகாரிகளுடன் குரூப் போட்டோ எடுத்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ