மேலும் செய்திகள்
பாரத பண்பாட்டு பயிற்சி வகுப்பு
10-Mar-2025
திருப்பூர்: விவேகானந்த சேவலாயத்தில் பண்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்த சேவலாயத்தில் பாரத பண்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. இதில், திருவண்ணாமலை ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி மாத்ரு சேவானந்த ஜீ மகராஜ் பங்கேற்று, நீதி போதனை குறித்து வகுப்பு எடுத்தார்.பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு கல்வி, சுய ஒழுக்கம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்து கூறப்பட்டது. ஏற்பாடுகளை சேவாலய நிறுவனர் செந்தில்நாதன் செய்திருந்தார்.
10-Mar-2025