உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீண்டும் சூறாவளிக்காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் சூறாவளிக்காற்று: வானிலை மையம் எச்சரிக்கை

உடுமலை,; திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என, வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.தற்போது கோடை காலம் துவங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் வெயில் அதிக அளவில் இருந்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை நிலவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வானம் பெரும்பாலும் மேக மூட்டத்துடன் இருக்கும். வரும், 11 முதல், 13ம் தேதி வரை துாறல் அல்லது லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது.அதிகபட்ச வெப்பநிலை, 36 முதல், 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை, 25 முதல், 26 டிகிரி செல்சியசாகவும் இருக்கும்.காலை நேர காற்றின் ஈரப்பதம், 50 முதல், 70 சதவீதம், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 முதல், 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. 'சராசரியாக மணிக்கு, 12 முதல், 24 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.இந்த வாரம், 11 முதல், 13ம் தேதி வரை சூறாவளிக் காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும்.எனவே, ஐந்து மாத வயதுடைய வாழைக்கு போதிய முட்டுக்கொடுப்பதன் வாயிலாக, மரம் சாயாமல் பாதுகாக்க முடியும். பிற மாவட்டங்களை விட, திருப்பூரில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதிகபட்ச வெப்பநிலை, 2 முதல், 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ