உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மழைக்காலத்தில் மின் கசிவு அபாயம் 

மழைக்காலத்தில் மின் கசிவு அபாயம் 

குமார் நகர் மின்செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடந்த கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில்,திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன் கொடுத்த மனு:கோல்டன் நகர் செல்லும் ரோட்டில், மின்கம்பம், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பவர்ஹவுஸ் முதல் கோவில்வழி வரை உள்ள ரோட்டில் உள்ள மின்கம்பங்கள், செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படும் விபத்து அபாயம் உள்ளது. வாலிபாளையம் மற்றும் மின்மயானம் செல்லும் ரோட்டில், மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன.வாகனங்களில் உரசும் அபாயம் உள்ளது. கோட்ட அளவில், பழைய மின்கம்பங்கள் சிமென்ட் பெயர்ந்து காணப்படுகின்றன. பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை