உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிழற்குடை

பொங்கலுார்; பொங்கலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட உகாயனுார் ஊராட்சியில் வாய்க்கால் மேடு பகுதி உள்ளது. பொங்கலுார் - திருப்பூர் ரோட்டில் இப்பகுதியில் பஸ் ஸ்டாப் நிழற்குடை உள்ளது. பல ஆண்டுகள் முன் கட்டிய இந்த நிழற்குடையில் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமரும் வகையில் சிமென்ட் இருக்கை அமைத்து டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் கூரையுடன் நிழற்குடை அமைந்துள்ளது. பல ஆண்டுகள் முன் அமைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில், கடந்த பத்தாண்டு முன் ஊராட்சி நிர்வாகம் இதை புதுப்பித்தது. கடந்த 11 ஆண்டுகளாக நிழற்குடை எந்த பராமரிப்பும் இல்லாமல் கண்டு கொள்ளப்படாமல் உள்ளது.இதை சீரமைப்பு செய்து முறையாக பராமரிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை