உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கீழடியின் பெருமையை இருட்டிப்பு செய்வதா?

கீழடியின் பெருமையை இருட்டிப்பு செய்வதா?

அவிநாசி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மேற்கு மண்டலம் சார்பில், மத்திய அரசு தொல்லியல் துறையினர் கீழடியின் தொன்மையை குறைக்காமல் ஆய்வு அறிக்கையை திருத்த நிர்பந்திக்க கூடாது என தொடர் முழக்கப் போராட்டம், அவிநாசி, சேவூர் ரோடு, செங்காடு திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணைத் தலைவர் நடிகை ரோகிணி பேசுகையில், ''ஏறத்தாழ, 2800 ஆண்டுகளுக்கு முன் கீழடியில் வாழ்ந்தவர்கள், கலைஞர்கள். நாம் தொடர்ந்து குரல் உயர்த்தி சொல்ல வேண்டிய ஒரு கட்டத்தில் முழக்கத்தை விட்டுவிடக்கூடாது. கீழடியின் பெருமையைப் பரப்ப வேண்டும்.அதனை இருட்டடிப்பு செய்வது சரியல்ல. நாம் வெற்றி பெறும் வரை இந்த முழக்கத்தை இடுவோம்'' என்றார்.முன்னதாக, எம்.பி., சுப்பராயன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சண்முகம்
ஜூன் 23, 2025 04:10

கீழடி காலத்தில் தமிழ் நாட்டில் சனாதனம் இல்லை என்ற உண்மை உறுத்துவதால் இருட்டிப்பு செய்யப்படுகிறது.


அப்பாவி
ஜூன் 22, 2025 08:15

தமிழையே கவுக்க முயற்சி நடக்குது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை