உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதுகலை நீட் தேர்வு விண்ணப்பிக்க கெடு

முதுகலை நீட் தேர்வு விண்ணப்பிக்க கெடு

திருப்பூர்: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான, எம்.டி., எம்.எஸ்., முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் 'நீட்' தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.முதுநிலை 'நீட்' தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்.,) ஜூன், 15ம் தேதி நடத்துகிறது. கணினி அடிப்படையில் இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த, 20ம் தேதி துவங்கியது. தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட, 17 இடங்களில் தேர்வு நடக்கவுள்ளது.இளநிலை மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு (எம்.டி., எம்.எஸ்., அல்லது முதுகலை டிப்ளமோ) https://natboard.edu.inஎன்ற இணையதளத்தில் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதுநிலை நீட்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை, 15ம் தேதி வெளியிடப்படும் என, மாவட்ட 'நீட்' தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை