உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

அவிநாசி; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க தலைவர் கோபால் தலைமை வகித்தார். ஏ.ஐ. டி.யு.சி. மாவட்டத் தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். நுாறுநாள் திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷமிடப்பட்டது. சங்க செயலாளர் ராமசந்திரன், துணை தலைவர் பத்ரன், துணை செயலாளர் கருப்புசாமி, பொருளாளர் காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ