உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிர்வாகிகளை இழிவுபடுத்துவதா? அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிர்வாகிகளை இழிவுபடுத்துவதா? அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி; அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்த சென்ற மாநில நிர்வாகிகளை இழிவு படுத்தியதை கண்டித்தும், பெரம்பலுார் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வட்டக்கிளை தலைவர் சின்ராஜ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் கருப்பன் விளக்கவுரை அளித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ராமன், இணைச் செயலாளர் வெங்கட்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ