உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் ஆய்வு

 வளர்ச்சி திட்ட பணி கலெக்டர் ஆய்வு

திருப்பூர்: ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார். கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நமக்கு நாமே, பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், துாய்மை பாரத இயக்கம் உள்பட பல்வேறு திட்ட பணிகள்; குடிநீர், தெருவிளக்கு, உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சதீஸ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை