உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளர்ச்சி பணிகள் துவங்கியது

வளர்ச்சி பணிகள் துவங்கியது

தாராபுரம், ; தாராபுரம் ஒன்றியம், கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் மற்றும் எம்.பி., தொகுதி வளர்ச்சி நிதி ஆகியவற்றில் வளர்ச்சிப் பணிகள் துவக்க விழா நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, ஈரோடு எம்.பி. பிரகாஷ் ஆகியோர் பணிகளை துவக்கி வைத்தனர். கவுண்டச்சிபுதுார் ஊராட்சியில், 45.98 லட்சம் ரூபாய் மதிப்பில் உடுமலை ரோடு முதல் அலங்கியம் ரோடு வரையும், மாருதி நகரில், 34.35 லட்சம் மதிப்பில், உடுமலை ரோடு முதல் மாருதி நகர் வரை தார் ரோடு அமைக்கும் பணி, எம்.பி., தொகுதிவளர்ச்சி நிதி, 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 30 ஆயிரம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி மாருதி நகரில் அமைக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது. கொண்டரசம்பாளையத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தில், 17.20 லட்சம் ரூபாய் மதிப்பில், 190 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், குடிநீர் குழாய் நீட்டிப்பு செய்தல் பணி, மேலும் 8.20 லட்சத்தில், கொண்டரசம்பாளையம் மயானத்துக்கு சுற்றுச்சுவர், 13 லட்சம் ரூபாயில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தார் ரோடு, என, மொத்தம் 1.37 கோடி ரூபாய் மதிப்பில், வளர்ச்சித் திட்ட பணிகள் துவக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை