உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமத்தில் பாழடையும் பணியாளர் குடியிருப்புகள்

கிராமத்தில் பாழடையும் பணியாளர் குடியிருப்புகள்

உடுமலை: கிராமங்களில் பாழடைந்து வரும், பொதுப்பணித்துறை குடியிருப்புகளை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பி.ஏ.பி., பாசன திட்ட பிரதான மற்றும் கிளை வாய்க்கால்களில் முன்பு நீர் நிர்வாகம் முழுவதும், பொதுப்பணித்துறை கால்வாய் பராமரிப்பு பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. மடைகளுக்கான ஷட்டர்கள் திறப்பு, நீர் பங்கீடு, தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு என இப்பணியாளர்கள், பாசன திட்டத்தில், முக்கிய பங்கு வகித்து வந்தார்கள். எனவே, திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, பல்வேறு இடங்களில், இப்பணியாளர்களுக்கென குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது இக்குடியிருப்புகள் கிராமங்களில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. இக்கட்டடங்களை புதுப்பித்து மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான குடியிருப்புகளையொட்டி ஆ்க்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளன. குடியிருப்புகள் இருந்த சுவடு இல்லாமல் அழியும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ