உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட சிலம்பம் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

மாவட்ட சிலம்பம் போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி

அவிநாசி ; மாவட்ட சிலம்பம் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் அதிக வெற்றிகளை பெற்றனர்.சமீபத்தில், திருப்பூரில் நடந்த சிலம்பம் போட்டியில், அவிநாசி அருகே ராக்கியாபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.அதில் பத்தாம் வகுப்பு படிக்கும் மகாலட்சுமி, வனிதா ஆகியோர் முதலிடமும், கற்பகவல்லி, தருண், ஸ்ரீதர் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்தனர். மேலும் தேவதர்ஷினி, தேனரசி, அனுசுயா ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.மேலும் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் வென்ற மாணவிகளுக்கு தங்கப் பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் ஆசிரியர் சக்தி முருகன், தலைமையாசிரியர் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ