உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட ஜூனியர் அணி தேர்வு

மாவட்ட ஜூனியர் அணி தேர்வு

உடுமலை; திருப்பூர் மாவட்ட ஹாக்கி சங்கத்தின் சார்பில், மாவட்ட ஜூனியர் பெண்கள் அணிக்கான தேர்வு இன்று நடக்கிறது.மாநில ஹாக்கி சங்கத்தின் சார்பில், ஜூனியர் பெண்களுக்கான மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி, தென்காசியில் வரும் 27 மற்றும் 30ம் தேதி நடக்கிறது.இப்போட்டியில் பங்கேற்பதற்கான திருப்பூர் மாவட்ட அணி தேர்வு, உடுமலையில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் இன்று (18ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.ஹாக்கி தேர்வில் பங்கேற்கவும், கூடுதல் தகவல் பெறுவதற்கும், மாவட்ட சங்க செயலாளர் மோகன்குமார் 82202 70128 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி