உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீரில் கழிவுநீர் கலப்பு; நோயால் மக்கள் பாதிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு; நோயால் மக்கள் பாதிப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மடத்துக்குளம்; மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துார் ஊராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.மடத்துக்குளம் ஒன்றியம், கடத்துார் ஊராட்சி பகுதிகளுக்கு, திருமூர்த்தி அணை கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், குடிநீர் வரும் பிரதான குழாய் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, குடிநீர் வினியோகம் செய்யும் குழாய்கள் பராமரிப்பின்றி, பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.அதிலும், கடத்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், குழாய் உடைந்து, பல மாதமாக குடிநீர் வீணாகி வருகிறது. மேலும், தேங்கியுள்ள கழிவு நீர் குடிநீரில் கலந்து, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மேலும். ஊராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதித்துள்ள நிலையில், பஸ் ஸ்டாண்டில் குளம் போல், தேங்கியுள்ள நீரால், சேறும், சகதியுமாக மாறி விபத்து ஏற்படுகிறது. கொசு உற்பத்தி, துர்நாற்றம் என சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.கழிவு நீர் கலந்து குடிநீர் வருவதால், குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும், என இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை, என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். குடிநீர் குழாய் உடைப்பு, கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற குடிநீர் வினியோக பிரச்னைக்கு தீர்வு காண ஒன்றிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ