உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் ஏகதச ருத்ர ஜப பாராயணம்

ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் ஏகதச ருத்ர ஜப பாராயணம்

திருப்பூர்; திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீ அய்யப்பன் கோவில் வளாகத்தில், ஸ்ரீகைலாசநாதர் சன்னதி உள்ளது. அய்யப்ப பக்த ஜன சங்கம், தர்ம சாஸ்தா டிரஸ்ட் சார்பில், ஸ்ரீகைலாசநாதருக்கு, ஏகதச ருத்ர ஜப பாராயணம் நடந்தது.கோவில் வளாகத்தில், விநாயகர் மற்றும் அய்யப்பன் வழிபாட்டை தொடர்ந்து, கைலாசநாதர் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு துவங்கி, 11:30 மணி வரை, வித்யார்த்திகள் பங்கேற்ற, ஏகதச ருத்ர ஜப பாராயணம் நடந்தது.மகாதீபாராதனையுடன், பாராயணம் நிறைவு பெற்றது. கோவில் நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அய்யப்ப பக்த ஜனசங்க உறுப்பினர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ