உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஸ்ரீ நாச்சா கிட்ஸ் பள்ளியில் ஆங்கிலப் புத்தாண்டு விழா

 ஸ்ரீ நாச்சா கிட்ஸ் பள்ளியில் ஆங்கிலப் புத்தாண்டு விழா

திருப்பூர்: ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளியின் கிளை பள்ளியான, அவிநாசி அருகே சேவூரிலுள்ள ஸ்ரீ நாச்சா கிட்ஸ் மழலையர் பள்ளியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குழந்தைகளுக்கான, 'ஜிங்கில் அண்ட் மிங்கில் கிட்ஸ் பெஸ்ட்' நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பலவித விளையாட்டுப் போட்டிகள், ஆடல், பாடல், இசை கச்சேரி போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது தவிர, 'பேஸ் பெயின்டிங்' மற்றும் மெஹந்தி, பலுான் பொம் மைகள், 360 டிகிரி செல்பி கார்னர் போன்றவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. விழாவை அலங்கரிக்கும் வண்ணம் பெற்றோர் பலவித கடைகளை அமைத்தனர். தாளாளர் மீனாட்சி, மேலாண்மைக்குழு உறுப்பினர் ஐஸ்வர்யா, செயலாளர் அகஷ்யா விக்ரம் முன்னிலை ஏற்று நடத்தினர். குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ