உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு

பருவ மழை எதிர்பார்ப்பு; மஞ்சள் சோளம் விதைப்பு

உடுமலை; பருவ மழை துவங்கவுள்ள நிலையில், மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வட கிழக்கு பருவமழை மேற்கு மலைத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள மாவட்டங்களில் அதிகம் கைகொடுப்பதாக உள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான மானாவாரி நிலம் கொண்டுள்ள விவசாயிகள், பல்வேறு மானாவாரி பயிர்களை பயிரிடுவர். வடகிழக்கு பருவ மழை துவங்கும் என்பதால் சோளம் பயிரிடப்படுகிறது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில், சோளம் விதைப்பு பணிகள் துவங்கியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ