உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீனியர் கபடி அணிக்கு வழியனுப்பு விழா

சீனியர் கபடி அணிக்கு வழியனுப்பு விழா

திருப்பூர் : இன்று முதல் வரும், 19 ம் தேதி வரை, மாநில சீனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி சேலத்தில் நடக்கிறது.இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட சீனியர் கபடி அணி வீரர்களுக்கான வழியனுப்பு விழா, விளையாட்டு உபகரணம் வழங்கும் விழா நடந்தது.திருப்பூர் மாவட்ட கபடி கழகத்தில் நடந்த விழாவுக்கு, மாவட்ட கபடி கழக சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட கபடி கழக செயலாளரும், மாநில பொருளாளருமான ஜெயசித்ராசண்முகம், மாவட்ட பொருளாளர் ஆறுச்சாமி முன்னிலை வகிததனர். கபடி வீரர்களுக்கு டிரேக் ஷூட், பேக், ஷூ, விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது.மாவட்ட கபடி கழக துணைத்தலைவர் ராமதாஸ், நாகராஜ், செய்தி தொடர்பாளர் சிவபாலன், இணை செயலாளர்கள் வாலீசன், செல்வராஜ், வளர்ச்சிக்குழு தலைவர் ராஜூ, நடுவர் குழு தலைவர் சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர். மாநில போட்டிக்கு செல்லும் அணி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை