மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., ரத்து கோரி உண்ணாவிரதம்
27-Nov-2024
திருப்பூர்; செத்துவரி உயர்வுக்கு எதிரான போராட்டம் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.ஜெ., பேரவை மாநில இணை செயலாளர் குணசேகரன், எம்.எல்.ஏ.,விஜயகுமார், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன் ஆகியோர், சொத்துவரி உயர்வு பாதிப்புகள் குறித்து பேசினர்.திருப்பூர் மாநகராட்சியின் அபரிமிதமான சொத்துவரி உயர்வு, ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்தும் முடிவை கண்டித்தும், வரியை குறைக்க வலியுறுத்தியும், 3ம் தேதி மாநகராட்சி அலுவலகம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. வரும் 5ம் தேதி, ஜெ., 8வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியை, தொண்டர்களுடன் இணைந்து நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக, 5வது வார்டு செயலாளர் நாச்சிமுத்து ஏற்பாட்டில், 6வது வார்டு தொட்டிபாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த தி.மு.க.,வினர், அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி, பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், வேலுமணி, முத்து, மாவட்ட இணை செயலாளர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-Nov-2024