குடியிருப்பு பகுதியில் வலம் வரும் குரங்கால் அச்சம்
உடுமலை; குடியிருப்பு பகுதியில் வலம் வரும் குரங்கை வனத்துறையினர் பிடித்து, அச்சத்தை தவிர்க்க வேண்டும் என, சோமவாரப்பட்டி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்கு வலம் வருகிறது. ஒன்றிய அலுவலக வளாகத்திலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியிலும், வலம் வரும் குரங்கை நாய்கள் துரத்துகின்றன.இதனால், மிரட்சியடைந்துள்ள குரங்கு வீடுகளுக்குள் புகுந்து கொள்கிறது. பல நாட்களாக அப்பகுதியில் வலம் வரும் குரங்கால், மக்களும் அச்சத்தில் உள்ளனர்.வனத்துறையினர் குரங்கை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விட்டு, அச்சத்தை தவிர்க்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.