உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண் கடத்தி வந்த லாரியில் தீ; தப்பியோடிய டிரைவருக்கு வலை

மண் கடத்தி வந்த லாரியில் தீ; தப்பியோடிய டிரைவருக்கு வலை

காங்கயம்; காங்கயத்தில் கிராவல் மண் கடத்தி வந்த லாரியில் ஏற்பட்ட தீ விபத்தால், லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பியோடியது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் கோவை -- கரூர் ரோட்டில் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து விசாரித்தனர்.தீ விபத்தில் சிக்கிய லாரி குங்காருபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. லாரியில் இரவு நேரங்களில் கிராவல் மண் கடத்தி வருவதை தொடர்கதையாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், ஐந்து யூனிட் கிராவல் மண் ஏற்றி சென்ற போது, தீ விபத்தில் சிக்கியது.போலீசார் விசாரணைக்கு பயந்து, லாரி டிரைவர் கடத்தி வரப்பட்ட மண்ணை அங்குள்ள தனியார் இடத்தில் கொட்டி விட்டு தப்பியோடியது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ