உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  உதய தின விழா கொடியேற்றம்

 உதய தின விழா கொடியேற்றம்

உடுமலை: உடுமலையில், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின், 27வது உதய தின விழா கொண்டாடப்பட்டது. உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள், காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில், கொடி ஏற்று விழா நடந்தது. சங்க கொடியை, மாநில பொது செயலாளர் அம்சராஜ் ஏற்றினார். அரசு ஊழியர் சங்க கொடியினை, மாவட்ட இணைச்செயலாளர் வைர முத்து எற்றினார். மாவட்ட துணைத்தலைவர் எலிசபெத் ராணி, ஓய்வூதியர் சங்கம் பாலகிருஷ்ணன், சாலைபணியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை