உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பறக்கும் படை சோதனை :ரூ.3.14 லட்சம் பறிமுதல்

 பறக்கும் படை சோதனை :ரூ.3.14 லட்சம் பறிமுதல்

திருப்பூர்:திருப்பூர் வடக்கு மற்றும் காங்கயம் தொகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் மொத்தம், 3.14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் வடக்கு தொகுதி பறக்கும் படை அலுவலர் திருமூர்த்தி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனை நடத்தினர். அதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முன்னா அலி, 43 என்பவரிடம், உரிய ஆவணங்கள் இல்லாமல், 2.14 லட்சம் ரூபாய் இருந்தது தெரிந்தது. இதனையடுத்து, அத்தொகையை செய்த பறக்கும் படையினர் வடக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். * முத்துார் - கொடுமுடி ரோட்டில், காங்கயம் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை