உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

பல்லடம்: பல்லடம் அருகே சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் கனகராஜ், 58. விவசாயி. நேற்று முன்தினம் இரவு, பல்லடம்-, மங்கலம் ரோடு, கல்லம்பாளையத்தில் உள்ள ஸ்வீட்ஸ் ஸ்டால் ஒன்றில், அல்வா வாங்கிச் சென்றார். அன்று இரவே, சாப்பிட்டதில், வாந்தி எடுத்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். இது குறித்து, பல்லடம் உணவு பாதுகாப்புத்துறை வட்டார அலுவலர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரித்தார். கடை உரிமையாளர், 'நாங்கள் டீலர் மட்டுமே; வாங்கி விற்பதால் எங்களுக்கு இதைப் பற்றி தெரியாது,' என்றார். 'டீலர் என்பதால், பொறுப்புணர்வு இன்றி பதில் கூறக்கூடாது. குற்றச்சாட்டு எழும்போது, வாடிக்கையாளர்களுக்கு அது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். பொருட்கள் அங்கிருந்து வந்ததும், அவற்றில், காலாவதி தேதியுடன் ஸ்டிக்கர் எழுதி ஒட்டி விட வேண்டும். இது குற்றச்சாட்டு என்பதால், ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என்று உணவு பாதுகாப்பு அலுவலர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை